Trending

6/recent/ticker-posts

கிணற்றில் விழுந்து 2 வயது சிறுமி பரிதாபமாக பலி! - ஏறாவூரில் சம்பவம்...!



ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்காமடி வீதி, ஏறாவூர் பகுதியில் சிறுமியொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 2 வயதுடைய சிறுமியே இவ்வாறு கிணற்றில் தவறி விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமி மாத்திரம் வீட்டிலிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டிற்கு முன்பாக இருந்த கிணற்றில் சிறுமி தவறி விழுந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments