Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்...!



உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இந்த தருணத்தில் இலங்கையில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்...!

“இறையில்லமான கஃபாவைத் தரிசிக்க இலட்சக் கணக்கிலான முஸ்லிம்கள் ஒன்றுகூடியுள்ளனர். ஐயாயிரம் வருடங்களையும் கடந்து நிற்கிறது இறைதூதர் இப்றாஹிமின் முன்மாதிரிகள்.

சமாதானம், சக வாழ்வு மற்றும் சகிப்புத் தன்மைகளுக்கான வழித்தடங்களை நிலைப்படுத்துவதே புனித ஹஜ். இவற்றுக்காக எல்லாவகையான தியாகங்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தின் இந்த 5 கடமைகளும் ஒருவரின் வாழ்க்கையில் கட்டியெழுப்பப்பட வேண்டிய பல்வேறு நற்குணங்களுக்கு வழிகாட்டுதலாகும். அமைதி, சகவாழ்வு, சகோதரத்துவம், தியாகம் மற்றும் ஆன்மீக நல்லொழுக்க வளர்ச்சி இவற்றில் முக்கியமானவையாகும்.

இந்த நன்நாளில் காஸா முஸ்லிம் கள் மனந்தளரவில்லை. இப்றாஹிம் நபியின் பூமியிலுள்ள இம்மக்கள், இறைவனின் நம்பிக்கையைத் தளரவிடவில்லை. இறைதூதர் காட்டிச் சென்ற அதே பொறுமை, அதே தியாகத்தையே காஸா மக்களும் கடைப்பிடிக்கின்றனர்.

இந்த நன்நாளில் உலக முஸ்லிம்களின் இன்னல்கள் நீங்கட்டும்! 


ஈத் முபாறக்!” 


நௌபர்-
வானொலி பணிப்பாளர் மற்றும் குழுமத்தினர்கள்,
ஸ்டார் ரேடியோ நெட்வெர்க்.

Post a Comment

0 Comments