Trending

6/recent/ticker-posts

Live Radio

உகண்டாவின் நெடுஞ்சாலையொன்றில் மோதிக்கொண்ட பேருந்துகள் - 63 பேர் உயிரிழப்பு...!!



உகண்டாவின் நெடுஞ்சாலையொன்றில் இன்று (22) இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உகண்டாவின் தலைநகரமான கம்பலாவிற்கும் குலு நகரத்துக்கும் இடையிலான நெடுஞ்சாலையிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

எதிரெதிர் திசைகளில் இருந்து வந்த இரண்டு பேருந்துகள், ஒரு லொறி மற்றும் விளையாட்டு பயன்பாட்டு வாகனமொன்றை முந்திச்செல்ல முற்பட்டபோதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments