Trending

6/recent/ticker-posts

Live Radio

இராஜதந்திர உறவை நிறுவிய இலங்கை - ஆன்டிகுவா, பார்பியூடா...!



ஐக்கிய அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க மற்றும் அமெரிக்காவிற்கான ஆன்டிகுவா மற்றும் பார்பியூடாவின் தூதுவர் சர் ரொனால்ட் சேண்டர்ஸ் ஆகியோரால் இராஜதந்திர உறவுகளை நிறுவுதல் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து,

இன்று 03 வொஷிங்டன் டி.சி.யில், இலங்கை அரசாங்கமும், ஆன்டிகுவா மற்றும் பார்பியூடா அரசாங்கமும் இரு நாடுகளுக்கும் இடையே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜதந்திர உறவுகளை நிறுவியுள்ளன.

இலங்கைக்கும் ஆன்டிகுவா மற்றும் பார்பியூடாவிற்கும் இடையே இராஜதந்திர உறவுகளை நிறுவுவதானது, இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக அரசியல், சமூக-பொருளாதார மற்றும் கலாசாரத் துறைகளில் தற்போதுள்ள நட்புறவுகளையும், ஒத்துழைப்பையும் விரிவுபடுத்தும். என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments