Trending

6/recent/ticker-posts

Live Radio

கார் வாடகை நிதி மோசடி; பொலிஸார் எச்சரிக்கை...!



கார் வாடகை தொடர்பான நிதி மோசடி குறித்து வெளிநாடுகளில் இருந்து திரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், ஒன்லைன் மூலம் கார் வாடகை சேவைகளைப் பெறும்போது விழிப்புடன் இருக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பணம் செலுத்துவதற்கு முன்பு கார் வாடகை நிறுவனத்தின் விவரங்களைச் சரிபார்க்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மோசடி செய்பவர்கள் பணம் பெறுவது, அவர்களின் தொலைபேசிகளைத் துண்டிப்பது மற்றும் சேவையை வழங்காமல் இருப்பது போன்ற முறைப்பாடுகள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

0 Comments