
அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் உள்ள லூயிவில் சர்வதேச விமான நிலையத்தில், விமானமொன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
ஹவாய் நோக்கிப் புறப்பட்ட சரக்கு விமானமொன்றே இன்று உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 5:15 அளவில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறப்பட்ட சில நிமிடங்களில் குறித்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் அதிலிருந்த சுமார் 38,000 கலன் எரிபொருள் வெடித்துச் சிதறியதால், விமானம் முழுவதுமாகத் தீப்பற்றி எரிந்தது.
இதனால் ஏற்பட்ட தீ அருகிலுள்ள வர்த்தக நிறுவனங்களுக்கும் பரவியதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்வதால், அதிகாரிகள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சுகின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த 11 பேர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தின் போது விமானத்தில் மூன்று விமான பணியாளர்கள் (Crew Members) இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக உடனடியாகப் பாதுகாப்பான தங்குமிடங்களை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம் ஆகியவை விசாரணையைத் தொடங்கியுள்ளன.
FOX 4 Dallas-Fort Worth



0 Comments