Trending

6/recent/ticker-posts

Live Radio

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான விசேட அறிவிப்பு...!


யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபனின் ஒருங்கிணைப்பின் கீழ், யாழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் கச்சதீவு திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் நலன் கருதி மாவட்டச் செயலகம் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

போக்குவரத்து ஏற்பாடுகள்

பேருந்து சேவை: 27.02.2026 அன்று அதிகாலை 4.00 மணி முதல் பி.ப. 1.00 மணி வரை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை அரச மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடும்.

படகுச் சேவை: குறிகட்டுவானில் இருந்து கச்சதீவுக்கான படகுகள் 27.02.2026 அன்று காலை 5.00 மணி முதல் பி.ப. 2.00 மணி வரை சேவையில் ஈடுபடும்.

பயணக் கட்டணம்: ஒரு நபருக்கான ஒரு வழிப் பயணக் கட்டணமாக ரூபாய் 1200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிவு நடைமுறைகள்

தனியாகவோ அல்லது குழுவாகவோ வருகை தரும் பக்தர்கள் பின்வரும் விபரங்களை இரண்டு பிரதிகளில் கொண்டு வருவது அவசியமாகும்.

பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை.

படகு விபரங்கள் (படகு இலக்கம், வகை, படகோட்டியின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம்).

சொந்தப் படகுகளில் வருவோருக்கான அறிவுறுத்தல்

வெளி மாவட்டங்களிலிருந்து சொந்தப் படகுகளில் வருவோர், தமது வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன், 27.02.2026 அன்று பி.ப. 4.00 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உணவு மற்றும் சுகாதார நடைமுறைகள்

28.02.2026 அன்று காலை உணவு மாத்திரம் ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும். ஏனைய நேரங்களுக்கான உணவை யாத்திரிகர்கள் கொண்டு வரலாம்.

கச்சதீவுப் பகுதியில் உணவு சமைப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

புனிதத் தலத்தின் கௌரவத்தைப் பேணும் வகையில் மதுபானம் கொண்டு வருதல், பாவித்தல் மற்றும் புகைப்பிடித்தல் என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments