Trending

6/recent/ticker-posts

Live Radio

பங்களதேஷை வீழ்த்தியது இலங்கை!



ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட்டில் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில், பங்களாதேஷ் அணியை 63 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவர் சஹான் அரச்சிகே 33 ஓட்டங்கள் எடுத்தார். பங்களாதேஷ் தரப்பில் மெஹதி ஹசன், சைஃப் ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

166 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி  17.3 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இலங்கை சார்பில் நுவன் துஷார, தரிந்து ரத்நாயக்க, விஜயகாந் வியாஸ்காந்த், வனுஜ சஹன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Post a Comment

0 Comments