Trending

6/recent/ticker-posts

Live Radio

இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்



தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 2 லட்சம் இந்திய ரூபா மதிப்பிலான கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ரோந்து படகில் மண்டபம் கடலோர பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

கண்காணிப்பின் போது கடலோரத்தில் கிடந்த 6 மூடைகளைக் கைப்பற்றிய வீரர்கள், அவற்றைச் சோதனையிட்டனர்.

இதில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 120 கிலோ எடையுள்ள கடல் அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

உயிருடன் இருந்த இந்தக் கடல் அட்டைகளை மறைவான இடத்தில் பதப்படுத்தி, கள்ளப்படகு மூலம் இலங்கைக்கு கடத்திச் செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதன் மதிப்பு இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாவாகும். கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறையினரிடம் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ஒப்படைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments