
கொழும்பு மாநகர முன்னாள் முதல்வர் ரோசி சேனாநாயக்கவின் மகனும், கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளருமான கனிஷ்க சேனாநாயக்க தனது 41ஆவது வயதில் காலமானார்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாகவே அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனிஷ்க சேனாநாயக்க 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



0 Comments