
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தினியாவல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அதிமேலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிடியாணை பெற்றிருந்த ஞானசார தேரர், நேற்று (03) கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை பகுதியில் அமைந்துள்ள தினியாவல ஆரண்ய சேனாசனம் ஒன்றில் மறைந்திருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் பகிரங்கப் பிடியாணை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



0 Comments