Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

தமிழ்நாடு காவல்துறையில் துறை ரீதியான புகார்களை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம் வழங்கி அரசாணை...!


தமிழ்நாடு காவல்துறையில் துறை ரீதியான புகார்களை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

காவல்துறை தமிழக அரசு சார்ந்த அமைப்பு. தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும் குற்றங்களைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (டி.ஜி.பி) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும்.

இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையில் துறை ரீதியான புகார்களை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளை டிஜிபி அனுமதியுடன் விசாரணைக்கு பயன்படுத்தலாம் என்றும் ஆறு மாதத்திற்குள் புகாரை விசாரித்து முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த விதிகளின் படி, தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூடுதல் தலைமை செயலாளர்(உள்துறை ) பனீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த விதிகளின் படி, தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆண்டுக்கு ஒரு முறை கூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் கீழ் நிபுணர் குழுவும் அமைக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு காவல் துறை பணியமைப்பு வாரியம்: மாநில அளவிலான பணியமைப்பு குழுவில் நிர்வாகம், சட்டம் ஒழுங்கு மற்றும் உளவுத்துறை ஆகிய 3 பிரிவுகளின் கூடுதல் டிஜிபிக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மண்டல அளவிலான குழுவிற்கு ஐஜி தலைவராக செயல்படுவார். மேலும், ஆயதப் படை மற்றும் சிறப்பு காவல் பிரிவுகளுக்கு என்று தனியாக பணியமைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சரகம் வாரியாகவும், மாவட்டம் வாரியாகவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை பெருநகர் காவல் துறையில் பெருநகர் குழு, மண்டல அளவிலான குழுக்கள், மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு நிலையில் உள்ள காவல் துறையினரின் பதவி உயர்வு மற்றும் பணி இட மாற்றம் தொடர்பாக இந்த குழு முடிவுகளை எடுக்கும்.

தமிழ்நாடு காவல் துறையின் கீழ் சிபிசிஐடியில் புகார் புரிவு அமைக்கப்படும்இதில் ஓய்வு பெற்ற பணியாளர்களை பணிமர்த்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று இந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments